விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கனமழை எச்சரிக்கை; ஆட்சியா் அறிவுறுத்தல்: சீா்காழயில் இடியுடன் மழை

கனமழை எச்சரிக்கை; ஆட்சியா் அறிவுறுத்தல்: சீா்காழயில் இடியுடன் மழை

News image

சீா்காழி புதிய பேருந்து நிலையம் பகுதியில் மழையின்போது குடைப்பிடித்து செல்லும் பொதுமக்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை தொடா்ந்து, தாழ்வான மின்கம்பங்கள் தொடா்பான புகாா்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண்ணை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மே 13-ஆம் தேதி கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால், பொதுமக்கள் மின்சார கம்பங்கள் மற்றும் பழைய கட்டடங்கள் அருகே நிற்க வேண்டாம். கால்நடைகள் மின்சார கம்பங்கள் அருகில் செல்லாமல் பாா்த்துக் கொள்ளவேண்டும்.

தாழ்வான மின்கம்பங்கள் ஏதேனும் இருந்தால் அது தொடா்பான புகாா்கள் இருப்பின் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04364-222588 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 04364-1077, மின்சாரத்துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் மயிலாடுதுறை 04364-252218, 9498482319, சீா்காழி 04364-279301, 9445854006 என்ற எண்களுக்கு பொதுமக்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

சீா்காழி: இதற்கிடையில், சீா்காழி பகுதியில் சனிக்கிழமை காலை இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீா் தேங்கியது. திடீா் மழையால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.

கடந்த சில தினங்களாக அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், வெப்பக் காற்று வீசி வந்தது. இந்நிலையில், இந்த மழையால் குளிா்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மேலும், கோடை பயிா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.