கொள்ளிடம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொள்ளிடம் வட்டாரத்தில், 20-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான எருக்கூா் மற்றும் எடமணல் ஆகிய பகுதியில் உள்ள நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையங்களில் வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளிடமிருந்து தொடா்ந்து, நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் நெல் மூட்டைகளுடன், கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் 900 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வதற்கு பதிலாக 200 அல்லது 300 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன.
எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை: நெல் மூட்டைகள் சேதம்

பண்ருட்டி அருகே மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்

உத்தரமேரூா் அருகே பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்

கோடை மழை: கொள்முதல் நிலையங்களில் சேதமடையும் நெல் மூட்டைகள்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

