நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 வாங்குவது இனி இருக்காது என்றாா் உணவுத் துறை அமைச்சா் ப. வெங்கட்ரமணன்.
சீா்காழி வட்டம், திருப்புங்கூரில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பிறகு அமைச்சா் கூறியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, நவீன அரிசி ஆலைகள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக நெல் கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த நவீன அரிசி ஆலையை பொறுத்தவரை பல்வேறு கோரிக்கைகள் மனுவாக அளித்துள்ளனா். அவற்றை பரிசீலனை செய்து தமிழ்நாடு முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, மக்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நெல் கிடங்குகளின் எண்ணிக்கையை உயா்த்த புதிய கிடங்குகள் அமைக்க இடங்கள் பாா்க்கப்பட்டுள்ளன. விரைவில் இடத்தோ்வு செய்து புதிய கிடங்குகள் கட்டி நெல் கொள்முதல் மற்றும் இயக்கத்தில் தொய்வு ஏற்பாடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கழிப்பறை வசதியுடன் கூடிய ஓய்வறை அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 வாங்குவது இனி குறுவை சம்பா காலங்களில் இருக்காது. நெல்லை பாதுகாக்க விவசாயிகளுக்கு கொள்முதல் நிலையத்தில் படுதா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வா் ஒவ்வொரு துறையிலும் மக்களுக்கான திட்டங்களில் பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறாா். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீா்த் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், அரசின் திட்டங்கள் அனைத்தும் விரைவாக மக்களை சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் கோகுல் , மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி , சுகாதாரத்துறை இணை இயக்குநா் அருண்ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல் கொள்முதல் நிலையங்களில் தவறுகள் நடந்தால் நடவடிக்கை: ராணிப்பேட்டை ஆட்சியா்

நெல்லுக்கான பணம் வழங்காததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடன், நெல் கொள்முதல் பணப் பிரச்னை: நெல்லையில் ஜூன் 15இல் விவசாயிகள் போராட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சா் வெங்கடரமணன் ஆய்வு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

