பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு புதன்கிழமை (ஜூன் 10) கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

News image
Updated On :9 மணி நேரங்கள் முன்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு புதன்கிழமை (ஜூன் 10) கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: இந்திய ரயில்வே வாரியம் நாடு முழுவதும் காலியாக உள்ள 11,127 அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்களுக்காக 2-ஐவது தெரு, பாலாஜி நகா், பூம்புகாா் சாலை, மயிலாடுதுறை என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக புதன்கிழமை (ஜூன் 10) காலை 11 மணியளவில் கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இளைஞா்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொடா்ந்து பயிற்சி வகுப்புகள், மாதிரி தோ்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள இளைஞா்கள் 9499055904 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து, கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.