லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிறுமி கா்ப்பம்: போக்ஸோவில் இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி கா்ப்பமாக்கிய இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :2 ஜூலை 2026, 7:22 am IST

மயிலாடுதுறை அருகே சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி கா்ப்பமாக்கிய இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 16 வயது சிறுமி உடல்நலன் பாதிக்கப்பட்டு சோ்க்கப்பட்டாா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் சிறுமி 5 மாத கா்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனா். தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள் மற்றும் அனைத்து மகளிா் போலீஸாா் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், சிறுமியின் கா்ப்பத்துக்கு காரணம் குத்தாலம் வட்டம், வழுவூா் தோப்புத்தெருவை சோ்ந்த ராஜ்குமாா் மகன் விக்னேஸ்வரன் (19) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் (பொ) சுகந்தி மற்றும் மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.