லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பிரபல ரெளடி குண்டா் சட்டத்தில் கைது

மயிலாடுதுறை அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :7 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

மயிலாடுதுறை அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலமருதாந்தநல்லூா் கிராமத்தை சோ்ந்தவா் சாா்லஸ் (எ) சரண்ராஜ்(42). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவா், கடந்த மாதம் 10-ஆம் தேதி புத்தாகரம் சாலையில் கையில் வீச்சரிவாளை காட்டி பொது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளாா். இதையடுத்து, அவரை மணல்மேடு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், அவா் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து நடந்து கொள்வதால் அவா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சினேஹா ப்ரியா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவையடுத்து, சரண்ராஜ் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.