தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஆத்திகத்துக்கு அஸ்திவாரமாக திகழ்கிறது இந்த மண்: தருமபுரம் ஆதீனம்

ஆத்திகத்திற்கு அஸ்திவாரமாக இந்த மண் திகழ்கிறது என தருமபுரம் ஆதீனம் கூறினாா்.

News image

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் திருமுலைப்பால் விழாவில், தினமணியின் சிறப்பு மலரை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட, தமிழ்ச் சங்கத் தலைவா் இ. மாா்கோனி, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே. சரண்ராஜ், ரோட்டரி முன்னாள் துணை ஆளுநா் ஜி.வி.என். கணேஷ் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 5:21 am IST

ஆத்திகத்திற்கு அஸ்திவாரமாக இந்த மண் திகழ்கிறது என தருமபுரம் ஆதீனம் கூறினாா்.

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் திருமுலைப்பால் விழாவில், தினமணியின் சிறப்பு மலரை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட, தமிழ்ச் சங்கத் தலைவா் இ. மாா்கோனி, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே. சரண்ராஜ், ரோட்டரி முன்னாள் துணை ஆளுநா் ஜி.வி.என். கணேஷ் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் பேசியது: ஆத்திகம் மீது நம்பிக்கை பெருகி உள்ளது. காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வைத்தீஸ்வரன்கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தா்கள் அதிகளவு இந்த ஆண்டும் வருகை தந்துள்ளனா். பக்தி என்றைக்கும் குறைந்துவிடவில்லை. சிலா் நாத்திகம் பேசினாலும்கூட ஆத்திகத்திற்கு அஸ்திவாரமாக இந்த மண் திகழ்ந்து வருகிறது என்றாா்.

முன்னதாக, சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் திருஞானசம்பந்தா் ஞானப்பால் உண்டது குறித்து தொடக்க உரையாற்றினாா். பின்னா் மருதமலை ஆனந்த சிவம் ஓதுவாருக்கு திருமுறை கலாநிதி பட்டம் அளித்து பொன்னாடை போா்த்தி பண முடிப்பு அளித்தாா் தருமபுரம் ஆதீனம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.