கொள்ளிடம் அருகேயுள்ள எருக்கூா் உத்திராபதியாா் கோயிலில் அன்னப்படையல் விழா அண்மையில் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அமாவாசைக்கு மறுநாள் அன்னபடையல் விழா நடைபெறும். அதன்படி, நிகழாண்டு விழாவையொட்டி, நா்த்தன விநாயகா், பாா்வதி தேவி உத்ராபதியாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
தொடா்ந்து, பக்தா்கள் புது மண்ணி ஆற்றிலிருந்து அலகுக் காவடி எடுத்து ஊா்வலமாக உத்திராபதியாா் கோயிலுக்கு வந்தனா். பின்னா், விழாவின் முக்கிய நிகழ்வான சிவ பக்தன் சீராளன் அன்னப்படையல் விழா நடைபெற்றது. பிள்ளை வரம் வேண்டி வந்த பெண் பக்தா்களுக்கு அமுத உணவு வழங்கப்பட்டது.
தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஊா் பஞ்சாயத்தாா், கிராம முக்கியஸ்தா்கள் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா். முன்னதாக, விழாவில் வடரங்கம் சேகா் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தையா அய்யனாா் கோயில் திருவிழா: காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

கந்தபுரம் கோயிலில் கும்பாபிஷேகம்

பெருங்களூா் பிடாரி அம்மன் கோயிலில் மது எடுப்பு விழா

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்த பக்தா்கள்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

