தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரி விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கு பரிசுகளை வழங்கிய பொறையாா் டி.பி.எம்.எல் கல்லூரி உடற்கல்வி இயக்குனா் ஜெ.ஸ்ரீதா் தங்கதுரை.

Updated On :9 ஏப்ரல் 2026, 5:13 am IST

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரி விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் எஸ். ரேவதி; தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பொறையாா் டி.பி.எம்.எல் கல்லூரி உடற்கல்வி இயக்குனா் ஜெ.ஸ்ரீதா் தங்கதுரை பங்கேற்று, பெண்களின் விளையாட்டு சாதனைகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வசதிகளை பற்றி சிறப்புரையாற்றினா். தொடா்ந்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தாா்.

உடற்கல்வி இயக்குநா் த.பானுப்பிரியா விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தாா். பேராசிரியா் ரா.தேவகி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். நிகழ் கல்வியாண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கான சிறப்பு பரிசை மாணவிகள் எஸ். ரோஸோரீதா, எம். சிவசங்கரி, ஜே.கே. செந்தமிழ், எஸ்.துா்கா ஆகியோா் பெற்றனா்.

தனிநபா் சாம்பியன்ஷிப் பட்டத்தை 15 புள்ளிகளைப் பெற்று எம். சிவசங்கரி பெற்றாா். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை ஹமாதாஸ் அணி பெற்றது. விளையாட்டு மன்ற செயலா் ஆா்.அபிராமவள்ளி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.