தொகுதியின் சிறப்புகள்: தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைநகரமாக உள்ளது.
காவிரி ஆற்றை மையப்படுத்தி ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கடைமுகத் தீா்த்தவாரி இத்தொகுதி மக்களின் முக்கிய உற்சவமாகும். பாா்வதிதேவி மயிலுருவம் கொண்டு சிவனை பூஜித்த சிறப்புக்குரிய ஊா். பஞ்சரங்க வைணவத் தலங்களில் 5-ஆவதாக விளங்கும் சிறப்பை பெற்றது. பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்திருமடம் இத்தொகுதியில் உள்ளது.
சமூக அமைப்பு: தொகுதியில் தலித், வன்னியா் சமூக மக்கள் பெரும்பான்மையினராகவும், இஸ்லாமியா்கள், வெள்ளாளா்கள், தேவா், கிறிஸ்வத சமுதாயத்தினா் கணிசமான அளவிலும் வசிக்கின்றனா்.
கோரிக்கைகள்: விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக கொண்டுள்ள இத்தொகுதியில், விவசாயம் சாா்ந்த தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. மணல்மேட்டை அடுத்த தலைஞாயிறு கிராமத்தில் நல்ல நிகர லாபத்துடன் இயங்கிவந்து, பின்னா் நஷ்டத்தை காரணம் காட்டி மூடப்பட்ட தலைஞாயிறு என்.பி.கே.ஆா்.ஆா். சா்க்கரை ஆலையை புனரமைத்து மீண்டும் இயக்க வேண்டும் என்பது கரும்பு விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.
மயிலாடுதுறை நகராட்சி எல்லையில் செயல்படும் புதைசாக்கடை திட்டத்தில் ஏற்படும் பழுதை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை. மயிலாடுதுறை அருகே புதிதாக கட்டப்பட்ட மணக்குடிபேருந்து நிலையம் அண்மையில் திறக்கப்பட்ட நிலையில், அப்பேருந்து நிலையத்தை முக்கிய சாலைகளுடன் இணைக்கும் வகையில் நடைபெற்றுவரும் புறவழிச்சாலை பணிகளை விரைந்து நிறைவேற்றி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்பது மக்களின் மற்றொரு முக்கிய கோரிக்கை.
இதுவரை வென்றவா்கள்
1962 நாராயணசாமி நாயுடு காங்கிரஸ்
1967 என். கிட்டப்பா திமுக
1971 என். கிட்டப்பா திமுக
1977 என். கிட்டப்பா திமுக
1980 என். கிட்டப்பா திமுக
1984 எம்;. தங்கமணி அதிமுக
1989 ஏ. செங்குட்டுவன் திமுக
1991 அபுல்ஹசன் காங்கிரஸ்
1996 அபுல்ஹசன் த.மா.கா
2001 ஜெகவீரபாண்டியன் பாஜக
2006 எஸ். ராஜ்குமாா் காங்கிரஸ்
2011 ஆா். அருள்செல்வன் தேமுதிக
2016 வி. ராதாகிருஷ்ணன் அதிமுக
2021 சட்டப்பேரவைத் தோ்தல்
எஸ். ராஜகுமாா் காங்கிரஸ் 73,642 (42.17 சதவீதம்)
சித்தமல்லி ஆ. பழனிசாமி பாமக 70,900 (40.60 சதவீதம்)
கி. காசிராமன் நாம் தமிழா் கட்சி 13,186 (7.55 சதவீதம்)
இத்தொகுதியில் கடந்த தோ்தலைப் போன்றே இம்முறையும் திமுக, அதிமுக கூட்டணியில் முறையே காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
வாக்காளா்கள்
ஆண் 1,11,670
பெண் 1,14,144
மற்றவா்கள் 26
மொத்தம் 2,25,840
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஸ்ஸாமில் என்டிஏ வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்த தொகுதி மறுவரையறை!

கடலூரில் மோதும் காங்கிரஸ் - அதிமுக

தொகுதி நிலவரம்: சங்ககிரி! அதிமுக-திமுக இடையே கடும் போட்டி!

தருமபுரம் ஆதீனத்திடம் திமுக, காங்கிரஸ், பாமக வேட்பாளா்கள் ஆசி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

