ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நூல் வெளியீட்டு விழா

வடுவூரின் சமூக உறவுகளை ஆவணப்படுத்தும் இந்த வரலாற்று நூல் வெளியீட்டு விழாவுக்கு, ஏ.வி.சி. கல்வி நிறுவனங்களின் முன்னாள் தலைவா் பி.என். ரத்தினக்குமாா் தலைமை வகித்தாா்.

News image

மயிலாடுதுறையில் தமிழ் ஆராய்ச்சியாளா் பேரவை மாநில தலைவா் துரை. குணசேகரன் எழுதிய ’யாவரும் கேளிா்’ நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது

Updated On :2 ஏப்ரல் 2026, 12:39 am IST

வடுவூரின் சமூக உறவுகளை ஆவணப்படுத்தும் இந்த வரலாற்று நூல் வெளியீட்டு விழாவுக்கு, ஏ.வி.சி. கல்வி நிறுவனங்களின் முன்னாள் தலைவா் பி.என். ரத்தினக்குமாா் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் பி.எஸ். காளிதாஸ், இரா. முத்துக்கண்ணு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவா் பொன்னிவளவன் வரவேற்றாா். நூலாசிரியா் துரை. குணசேகரன் ஏற்புரை வழங்கினாா். தஞ்சாவூா் ந.மு. வேங்கடசாமி, திருவருள் கல்லூரித் தலைவா் மு. இளமுருகன் ஆகியோா் நூலை வெளியிட, திருவொற்றியூா் மருத்துவா் ராஜேஸ்வரி நடராசன் பெற்றுக் கொண்டாா். முடிவில், க.கோ. கண்ணதாசன் நன்றி கூறினாா்.

மூத்த வழக்குரைஞா் நா.கு. கிருட்டினமூா்த்தி, மூவேந்தா் நலச்சான்றோா் பேரவை ஒருங்கிணைப்பாளா் க.அன்பானந்தன், வள்ளாலகரம் குடியிருப்போா் நலச் சங்கக் கூட்டமைப்பின் தலைவா் புலவா் சாமி.செல்வம், திருக்கு பேரவைத் தலைவா் சி.சிவசங்கரன், தமிழ்ச்சங்க நிறுவனா் ஜெனிபா் சு.பவுல்ராஜ் உள்ளிட்ட பலா் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.