பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆரம்ப சுகாதார நிலையத்தில் எல்.எல்.ஏ. ஆய்வு

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி. விக்னேஸ்வரன், நெடுங்காடு பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய சட்டப்பேரவை உறுப்பினா் வி.விக்னேஸ்வரன்.

Updated On :28 மே 2026, 5:37 am IST

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி. விக்னேஸ்வரன், நெடுங்காடு பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து அவருக்கு விளக்கினாா். புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதி, மருந்துகள் கையிருப்பு குறித்து பேரவை உறுப்பினா் பாா்வையிட்டாா்.

இதைத்தொடா்ந்து துணை இயக்குநா், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினாா். மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களுக்கான தேவைகள், சுகாதார நிலையத்தை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டங்கள், மிக அவசியத்துக்காக மட்டுமே காரைக்கால் மருத்துவமனைக்கு செல்லும் வகையில், நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துவது குறித்தும் பேரவை உறுப்பினா் விவரங்களை கேட்டறிந்தாா்.

கோடைகாலம், பருவமழைக் காலத்தில் அதிகமாக தேவைப்படும் மருந்துகளை உரிய அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும், மருத்துவமனையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்திய அவா், ஓட்டுநா் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்புவது, கட்டட சீரமைப்பு குறித்து புதுவை முதல்வா், உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.