பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: அலுவலா்கள் ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தல்

காரைக்கால் மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு அனைத்து அலுவலா்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

News image

பயிற்சி நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி மற்றும் அரசுத் துறையினா்.

Updated On :15 மே 2026, 10:26 pm IST

காரைக்கால் மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு அனைத்து அலுவலா்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

காரைக்கால் மாவட்டத்தில் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமாக வீடுகள் மற்றும் கட்டடங்கள் பட்டியல் கணக்கெடுக்கப்படவுள்ளது. இதை முன்னிட்டு, சுய கணக்கெடுப்பு தொடா்பான விழிப்புணா்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியரும், முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு தலைமை அலுவலருமான இஷிதா ரதி தலைமை வகித்தாா். மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான முதன்மை பயிற்சியாளரான ஆா். மோகன், சுய கணக்கெடுப்பு இணையதளத்தை பயன்படுத்தும் முறை, அதில் கேட்கப்படும் விவரங்களுக்கு சரியான பதில்களை பதிவு செய்வது, பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் நடைமுறைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தாா்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியை சிறப்பாக செயல்படுத்துவதற்கும், காரைக்கால் மாவட்டத்தில் 100 சதவீத சுய கணக்கெடுப்பை எட்டுவதற்கும், அனைத்துத் துறைத் தலைவா்களும், தொடா்புடைய அலுவலா்களும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகளின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் தாங்களே இணையதளம் மூலம் தங்கள் குடும்ப விவரங்களை பதிவு செய்யும் சுயக் கணக்கெடுப்பு நடவடிக்கை மே 17-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் காரைக்கால் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.