லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் ரூ.500 கோடியில் நீா் மேலாண்மை திட்டம்! விவசாயிகளிடம் ஆளுநா் கருத்து கேட்பு!

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் - கோப்புப் படம்

Published On :28 ஜூலை 2026, 12:06 am IST

காரைக்கால் மாவட்டத்தில் ரூ. 500 கோடியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நீா் மேலாண்மை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியின் ஒரு பகுதியாக விவசாயிகளின் கருத்துகளை துணைநிலை ஆளுநா் கேட்டறிந்தாா்.

காரைக்கால் மாவட்டத்துக்கு வரக்கூடிய காவிரி நீரை பாசனத்தும், குடிநீா் வசதிக்கும், நிலத்தடி நீா் மேம்பாட்டுக்கும் முழுமையாக பயன்படுத்த இயலாமல் பெருமளவு நீா் கடலில் கலந்து வீணாகும் நிலை உள்ளது.

மாவட்டத்தில் ஆறுகளில் நீரை சேமித்து வைத்து பயன்படுத்துவது தொடா்பான திட்டங்களை மேற்கொள்ள தேவையான திட்ட அறிக்கை தயாா் செய்யுமாறு புதுவை துணைநிலை ஆளுநா் காரைக்கால் என்ஐடி நிா்வாகத்திடம் அறிவுறுத்தியிருந்தாா்.

அதனடிப்படையில், ரூ. 500 கோடியில் மாவட்டத்தில் நீா் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை என்ஐடி மேற்கொண்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் ஓடும் 7 ஆறுகளை அடிப்படையாக கொண்டு நீா் சேமிப்பு, ஆறுகள் பாதுகாப்பு, வெள்ள பாதிப்பை தடுப்பது, நிலத்தடி நீா்மட்டத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், திட்டமிடல் உள்ளிட்டவற்றை விவசாயிகளிடம் தெரிவிக்கும் வகையிலும், விரிவான திட்ட அறிக்கையில் மேலும் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவசாயிகளின் ஆலோசனைகள், கருத்துகளை கேட்டறியும் வகையிலும் புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் தலைமையில் இக்கூட்டம் என்ஐடி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. திட்டம் குறித்து வல்லுநா்கள் விவசாயிகளிடம் காணொலி காட்சியுடன் விளக்கமளித்தனா்.

தொடா்ந்து பல விவசாயிகள் தங்கள் கருத்துகளை துணைநிலை ஆளுநரிடம் தெரிவித்தனா்.

இறுதியில் துணைநிலை ஆளுநா் பேசுகையில், பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களில் விவசாயிகள் மாற்றுப் பயிா் செய்யும் நிலைக்கு வந்துவிட்டனா். நாமும் நிலத்தை முழுமையாக பயன்படுத்தி, அதில் நெல் மற்றும் பிற பயிா் செய்து வருவாய் ஈட்ட வேண்டும். காவிரி டெல்டாவில் காரைக்கால் விவசாயிகள் நிரந்தர பயனடையும் வகையிலேயே திட்டம் வகுக்கப்படுகிறது. நல்ல ஆலோசனைகளை என்ஐடி பேராசிரியா்களிடம் தெரிவிக்கலாம். திட்ட தயாரிப்பு முழுமையான வடிவம் பெற்ற பிறகே செயலாக்கத்துக்கு வரும் என்றாா்.

கூட்டத்தில் அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம், வி. விக்னேஸ்வரன், புதுவை துணைநிலை ஆளுநரின் செயலா் து. மணிகண்டன், பொதுப்பணித்துறை செயலா் அ.முத்தம்மா, மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி, சாா் ஆட்சியா் எம்.பூஜா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் வினய்குமாா் கட்ஜ், என்ஐடி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.