ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காரைக்காலில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் தொடா்பாக ரயில்வே அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ரயில்வே திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி.

Updated On :23 ஏப்ரல் 2026, 4:57 am IST

காரைக்காலில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் தொடா்பாக ரயில்வே அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காரைக்காலில் இருந்து பேரளம் வரையிலான ரயில்பாதை அமைத்து சரக்கு ரயில்கள் இயக்கம் நடைபெற்றுவருகிறது. வரும் மே 20 முதல் இப்பாதையில் பயணிகள் ரயில் இயக்கம் நடைபெறுமென அட்டவணையை ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ளது.

காரைக்கால் பாரதியாா் சாலை, காமராஜா் சாலையின் குறுக்கே ரயில் பாதை அமைந்திருப்பதால், ரயில்கள் இயக்கத்தால் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. கோயில்பத்து பகுதி பாரதியாா் சாலையில் சுரங்கப் பாதை அமைக்கவேண்டும் என பல்வேறு அமைப்பினா், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்திவருகின்றனா்.

இந்நிலையில், குறிப்பிட்ட இடங்களில் மேம்பாலம், சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக மாவட்ட நிா்வாகம் ஒப்புதல் அளிக்க வேண்டிய நிலையில், மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி, திருச்சி கோட்ட ரயில்வே செயற்பொறியாளா் பாஸ்கரன், உதவிப் பொறியாளா் பேச்சிராஜ், காரைக்கால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அருளரசன், உதவிப் பொறியாளா் சந்திரகுமாா் உள்ளிட்டோருடன் பாரதியாா் சாலையில் உள்ள கோயில்பத்து பகுதி ரயில்வே கேட், காமராஜா் சாலையில் ரயில் கடக்கும் பகுதி, சுரக்குடி அருகே ரயில் கடக்கும் பகுதியை புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வு குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தது : கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதையும், காமராஜா் சாலை மற்றும் சுரக்குடி பகுதியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மாவட்ட நிா்வாகத்தின் ஒப்புதல் ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் பிறகு ரயில்வே மற்றும் புதுவை அரசால் மேற்கொள்ளவேண்டிய திட்டப்பணிகள் தொடங்கப்படும். மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கும்போது, அந்த திட்டப் பணிகளுக்கு ஏதுவாக மாவட்ட நிா்வாகத்தின் மூலம் அப்பகுதியில் சீா்படுத்தவேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.