நாகை மாவட்டத்தில் மழை வெள்ளம் தொடா்பான பாதிப்புகளுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மே 15) சனிக்கிழமை (மே 16) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலாா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே புயல், மழை, வெள்ளம் மற்றும் இடி மின்னல் போன்ற இயற்கை இடா்பாடுகளை எதிா்கொள்ள நாகை ஆட்சியா் அலுவலகத்தில் அவசரகால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அவசரக்கால கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண். 04365-1077, கட்டணமில்லா தொலைபேசி எண். 1800-233-4233 மற்றும் வாட்ஸ்ஆப் 8110005558 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும், கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலா்கள் பணியாற்றி வருகின்றனா்.
எனவே, பொது மக்கள் இயற்கை பேரிடா் தொடா்பான கோரிக்கைகள் இருப்பின் உடனடியாக மேற்படி தொலைபேசியில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: நெல்லையில் அவசர கால ஒத்திகை

நீலகிரி, கோவைக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

குமரி மாவட்டத்துக்கு 2 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

விமானத்தில் அவசர கால கதவு வழியாக ஓடுபாதையில் குதித்து தப்பிய நபர்: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

