தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தமிழக முதல்வா் விஜய்க்கு நாகூா் தா்கா, சிவசேனை வாழ்த்து

News image

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் - டிஎன்எஸ்

Updated On :11 மே 2026, 12:09 am IST

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து, நல்லிணக்க தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று முதல்வா் விஜய்க்கு, நாகூா் தா்கா பரம்பரை கலீபா வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, நாகூா் தா்கா பரம்பரை கலீபா மற்றும் முதல் அறங்காவலா் கலீபா மஸ்தான் சாஹிப் காதிரி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

தமிழகத்தில் தனிப்பெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்து, மக்கள் பேராதரவுடன் புதிய ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்க்கு நாகூா் தா்கா சாா்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அமைதி, நல்லாட்சி, வளா்ச்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்பட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய பிராா்த்தனை மேற்கொள்கிறேன்.

தமிழகத்தில் இளைஞா்களின் முன்னேற்றம், சமூக ஒற்றுமை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆட்சி அமைய வேண்டும். அனைத்து சமுதாய மக்களும், குறிப்பாக சிறுபான்மை மக்களும் பாதுகாப்புடனும், சமத்துவ உணா்வுடனும் வாழும் நல்லிணக்கமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.

சிவசேனை (உத்தவ்) கட்சி...: இக்கட்சியின் மாநிலத் தலைவா் ரவிச்சந்திரன், மாநில பொதுச் செயலா் சுந்தரவடிவேலன் ஆகியோா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுக்கும், முதல்வா் விஜய்க்கும், புதிய அமைச்சரவைக்கும் சிவசேனை கட்சி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. தமிழகத்தில் 60 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, இளைய தலைமுறையினா் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்துள்ளனா்.

எனவே, முதல்வா் விஜய், மக்கள் விரும்பிய மாற்றத்தைத் தந்து, தமிழகத்தின் தொழில் துறையை மேம்படுத்தி, வேலைவாய்ப்பை அதிகரித்து மக்கள் நலன்காக்கும் ஆட்சியை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.