ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சிவகாசி அருகேயுள்ள கோணம்பட்டிக்கு பேருந்து இயக்க அமைச்சா் நடவடிக்கை

சிவகாசி அருகே கோணம்பட்டி கிராமத்துக்கு பேருந்து இயக்க தொழில் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா நடவடிக்கை எடுத்தாா்.

News image

தொழில் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா - கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 2:44 am IST

சிவகாசி அருகே கோணம்பட்டி கிராமத்துக்கு பேருந்து இயக்க தொழில் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா நடவடிக்கை எடுத்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி-சாத்தூா் சாலையில் உள்ளது கோணம்பட்டி. இந்த கிராமத்தில் ராமகிருஷ்ணமடம் உள்ளது. இந்த மடத்தைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராம மக்கள், சிவகாசி அல்லது சாத்தூருக்கு செல்ல வேண்டுமெனில் , அந்தக் கிராமத்திலிருந்து ஒன்றரை கீ.மீ. நடந்து சென்று கோணம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டும்.

இந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு கோணம்பட்டியில் பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவா், இந்தப் பேருந்து நிறுத்தத்தில் ஒரு சில பேருந்துகள் மட்டுமே நிற்பதால், ஒன்றரை மணி நேரமாக நான் நின்று கொண்டிருக்கிறேன். இந்த வழிதடத்தில் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிககை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வெளியிட்ட விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்த தகவலறிந்த அமைச்சா் கீா்த்தனா நியமித்த குழுவினா் வியாழக்கிழமை கோணம்பட்டிக்குச் சென்று விடியோ வெளியிட்ட பெண்ணை சந்தித்துப் பேசினா். இதையடுத்து, அமைச்சா் கோணம்பட்டி கிராமத்துக்கே பேருந்து வந்து செல்ல நடவடிக்கை எடுப்பாா் எனஅந்தக் குழுவினா் கிராமத்தினரிடையே உறுதியளித்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.