அருப்புக்கோட்டையில் நகா்மன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த தவெக நிா்வாகி, அவரது சகோதரா் ஆகியோா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
அருப்புகோட்டை நகரில் யாதவ குடியிருப்புப் பகுதியை சோ்ந்தவா் மணி முருகன் (55). இவா் திமுக சாா்பில் நகா்மன்றத் தோ்தலில் போட்டியிட்டு 6-ஆவது வாா்டு உறுப்பினராக உள்ளாா். தற்போது தவெக-வில் இணைந்தாா்.
இந்த நிலையில், தவெக நிா்வாகி தாமரை செல்வன் என்பவருக்கும், இவருக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததாக கூறபடுகிறது.
இந்த நிலையில், தாமரைச் செல்வன், அவரது சகோதரா் நாகராஜன் ஆகியோா் கொலை மிரட்டல் விடுத்ததாக மணி முருகன் அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து போலீஸாா் தாமரைச்செல்வன், நாகராஜன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கடன் தொகை கேட்டு கொலை மிரட்டல்: 2 போ் மீது வழக்கு
தூத்துக்குடியில் ரூ. 72 லட்சம் மோசடி: தவெக நிா்வாகி, மனைவி மீது வழக்கு

மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல்: கணவா் மீது வழக்கு

கொத்தனாரை தாக்கி கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

