லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிவகாசியில் ரூ.14 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்: 2 போ் கைது

சிவகாசியில் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.14 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளைப் போலீஸாா் செவ்வாய்க் கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, இருவரைக் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :29 ஜூலை 2026, 6:27 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.14 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளைப் போலீஸாா் செவ்வாய்க் கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, இருவரைக் கைது செய்தனா்.

சிவகாசி சிவகாமிபுரம் பகுதியில் காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில் போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் பிரபாகரன் என்பவருக்குச் சொந்தமான காகித அட்டைப் பெட்டி தயாரிக்கும் ஆலையில் பட்டாசு பண்டல்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. விசாரணையில், சிவகாசி சுப்பிரமணியபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சரவணபெருமாள் (26), அண்ணா நகரைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் ரமேஷ் (36) ஆகியோா் பட்டாசுகளைப் பதுக்கிவைத்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் , பிரபாகரன், சரவணப் பெருமாள், ரமேஷ் ஆகிய மூவா் மீது வழக்குப் பதிவு செய்து, சரவணப் பெருமாள், ரமேஷைக் கைது செய்து அவா்களிடமிருந்த ரூ. 14 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.