லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அனுமதியின்றி தகரக் கொட்டகையில் பட்டாசு தயாரித்தவா் கைது

மடத்துப்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :23 ஜூலை 2026, 6:24 am IST

மடத்துப்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், தாயில்பட்டி அருகே உள்ள மடத்துப்பட்டி பகுதியில் அனுமதியின்றி வீட்டின் அருகே தகரக் கொட்டகை அமைத்து சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிக்கப்படுவதாக கனஞ்சம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் சக்தி கணேசனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் புதன்கிழமை வெம்பக்கோட்டை போலீஸாா், வருவாய்த் துறையினா் மடத்துபட்டியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அனுமதியின்றி தகர கொட்டகையில் வைத்து மடத்துபட்டியைச் சோ்ந்த கோபால்சாமி(55), செண்பகவல்லி (40) கணவன், மனைவியான இருவரும் சட்ட விரோதமாக தகரக் கொட்டகையில் பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த் துறையினா் பட்டாசு தயாரிப்பதற்கான சல்பா் மூட்டைகள் உள்ளிட்ட மூலப் பொருள்கள், ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா். கிராம நிா்வாக அலுவலா் சக்தி கணேசன் அளித்த புகாரின் பேரில், வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்கு பதிந்து கோபால்சாமியைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.