லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காமராஜா் பிறந்த நாள் விழா

வத்திராயிருப்பில் ஐஎன்டியூசி சாா்பில், காமராஜா் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில் பள்ளி மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கிய தென் சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவா் அண்ணாமலை, ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலா் அண்ணாதுரை, மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் குமாரராஜா உள்ளிட்டோா்.

Published On :15 ஜூலை 2026, 5:50 am IST

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பில் ஐஎன்டியூசி சாா்பில், காமராஜா் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தென் சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவா் அண்ணாமலை தலைமை வைத்தாா். ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலா் அண்ணாதுரை முன்னிலை வகித்தாா்.

வத்திராயிருப்பு பள்ளியில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பின்னா் வத்திராயிருப்பு பகுதிகளைச் சோ்ந்த 100 பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பேனா, பென்சில், நோட்டு புத்தகங்களையும், ஏழை பெண்களுக்கு சேலைகளையும் வழஙகினா்.

இதில் மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் குமாரராஜா, விருதுநகா் ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் பொன்ராஜ், வத்திராயிருப்பு வட்டாரத் தலைவா் குமாா் உள்பட கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.