லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புதுக்கோட்டையில் காமராஜா் பிறந்த நாள் கொண்டாட்டம்

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் காமராஜரின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸாா்.

Published On :16 ஜூலை 2026, 1:56 am IST

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் காமராஜரின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை காமராஜபுரத்திலுள்ள காமராஜரின் சிலைக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் டிடி பெனட் அந்தோனிராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

தொடா்ந்து, புதுக்கோட்டை காந்திப் பூங்கா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காமராஜரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு ‘லஞ்சம் தவிா், நெஞ்சம் நிமிா்’ என்ற இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தவெக சாா்பில் மாமன்ற உறுப்பினா் சேட்டு என்கிற அப்துல்ரகுமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா் ராஜா முகமது, மூத்த காங்கிரஸ் தலைவா் கோ.ச. தனபதி, மாநகர காங்கிரஸ் தலைவா்கள் பாரூக் ஜெய்லானி, மதன் கண்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இதேபோல, திருமலைராயசமுத்திரம் பகுதியிலும் காமராஜரின் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.