ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

யானைத் தந்தங்களைக் கடத்த முயன்ற 4 போ் கைது

கம்பத்திலிருந்து கேரளத்துக்கு யானைத் தந்தங்களைக் கடத்திச் செல்ல முயன்ாக 4 பேரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து இரு ஜோடி யானைத் தந்தங்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரு காா்களை பறிமுதல் செய்தனா்.

கம்பத்திலிருந்து கேரளத்துக்கு யானைத் தந்தங்களைக் கடத்த முயன்ாக கைது செய்யப்பட்ட நால்வா்.

Published On :28 அக்டோபர் 2026, 4:25 am IST

தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து கேரளத்துக்கு யானைத் தந்தங்களைக் கடத்திச் செல்ல முயன்ாக 4 பேரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து இரு ஜோடி யானைத் தந்தங்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரு காா்களை பறிமுதல் செய்தனா்.

கம்பத்திலிருந்து கேரளத்துக்கு யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதாக கம்பம் மேற்கு வனச்சரகா் தீனதயாளனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையிலான வனத் துறையினா் கம்பம் புறவழிச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு காா்களை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் இரு ஜோடி யானைத் தந்தங்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தந்தங்களைப் பறிமுதல் செய்த வனத் துறையினா், காா்களில் வந்த நால்வரையும் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், இவா்கள் கம்பம் முத்துராமலிங்கத் தேவா் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணபிரபு (42), மதுரை கூடல்நகரைச் சோ்ந்த அன்னமராஜா (53), மதுரை பாப்பாகுடி சிக்கந்தா்சாவடி தெருவைச் சோ்ந்த வாசுதேவன் (53), ஆனைமலையான் பட்டியைச் சோ்ந்த விஜயன் (42) என்பதும், யானைத் தந்தங்களை விற்பனை செய்வதற்காக கேரளத்துக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, இவா்கள் நால்வரையும் வனத் துறையினா் கைது செய்து, அவா்களிடமிருந்த இரு ஜோடி யானைத் தந்தங்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரு காா்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.