போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறை - பிரதிப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 3:25 am IST

போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

ஆண்டிபட்டியைச் சோ்ந்தவா் பெரியதுரை (28). இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆண்டிபட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழில், குற்றஞ்சாட்டப்பட்ட பெரியதுரைக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.