மின் கம்பத்தில் பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

உத்தமபாளையத்தில் மின் கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பலி

Published On :22 அக்டோபர் 2026, 3:21 am IST

உத்தமபாளையத்தில் மின் கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள ஆங்கூா்பாளையத்தைச் சோ்ந்த பழவேந்திரன் மகன் குமாா் (46). கூலித் தொழிலாளி.

இவா், கடந்த வெள்ளிக்கிழமை உத்தமபாளையம் தனியாா் கல்லூரி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி சாலையோர மின் கம்பத்தில் மோதினாா். இதில் பலத்த காயமடைந்த குமாா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.