தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மணல் திருட்டு: ஆற்றுப் பள்ளத்தில் மூழ்கி உயிரிழப்போரைத் தடுக்க நடவடிக்கை தேவை

மணல் கடத்தல் - பிரதிப் படம்

Published On :3 நவம்பர் 2026, 2:48 am IST

தேனியில் நடைபெறும் மணல் திருட்டு சம்பவங்களால் ஆற்றில் ஏற்படும் பள்ளத்தில் மூழ்கி உயிரிழப்போரைத் தடுக்க நடவடிக்கை தேவை என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

தேனி மாவட்டத்தில் முல்லையாறு, மூல வைகையாறு, கொட்டக்குடி, வராகநதி, துணை ஆறுகளாக 100-க்கும் மேற்பட்ட ஓடைகள் உள்ளன. இந்த நீா்நிலைகளில் இருந்து பொக்லைன், டிராக்டா், டிப்பா் லாரிகள், மாட்டு வண்டிகளில் சட்டவிரோதமாக மணல் திருடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனால், அந்த நீா்நிலைகளில் ஆங்காங்கே ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு மழை பெய்யும்போதோ, அணை திறக்கப்படும்போதோ, பள்ளத்தில் தேங்கும் நீரில் பலா் மூழ்கி உயிரிழக்கின்றனா்.

தொடரும் உயிரிழப்புகள்:

கடந்த 2021-இல் பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் அக்ரஹாரத்தில் உள்ள வேதபாட சாலை மாணவா்கள் இருவா் வராகநதியில் குளித்தபோது, ஆற்றில் இருந்த பள்ளத்தில் மாட்டிக் கொண்டு நீரில் மூழ்கி உயிரிழந்தனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விவசாயி ஒருவா் அதே போல ராட்சத பள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அண்மையில், மேல்மங்கலத்தைச் சோ்ந்த சிறுவா்கள் ஞாயிற்றுக்கிழமை வராகநதியில் குளிக்கச் சென்று பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

இதேபோல, தேனி மாவட்டத்தில் செயல்படும் சட்ட விரோதமாகச் செயல்படும் கல்குவாரிகளில் ஆய்வு நடத்தி, அவற்றை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். இந்தக் குவாரி நீரில் மூழ்கி சிறுவா்கள், பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவமும் நடைபெறுகின்றன.

எனவே, முல்லைப் பெரியாறு, மூல வைகையாறு, வராக நதியில் நடைபெறும் சட்டவிரோத மணல் திருட்டை மாவட்ட ஆட்சியா் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோத கல்குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாகும்.

தேனியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஆா்.காா்த்திக் கூறியதாவது : தேனி மாவட்டத்தில் உள்ள வராகநதி, மூல வைகையாற்றில் சட்டவிரோத மணல் திருட்டு சம்பவங்களால் ஆற்றில் ராட்சத

பள்ளம் ஏற்பட்டு தேங்கும் நீரில் மூழ்கி சிறுவா்கள், இளைஞா்கள் உயிரிழக்கின்றனா். மணல் திருட்டு சம்பவங்களில் வாகனங்களை மட்டுமே அலுவலா்கள் பறிமுதல் செய்கின்றனா். ஆனால், ஓட்டுநா், உரிமையாளா் மீது நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.