கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கமுதியில் பிளஸ் 1 மாணவி ஊருணியில் மூழ்கி உயிரிழப்பு

Drowned to death

நீரில் மூழ்கி பலி - பிரதிப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 12:06 am IST

கமுதியில் ஞாயிற்றுக்கிழமை ஊருணியில் குளித்துக் கொண்டிருந்த பிளஸ் 1 மாணவி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வாரச்சந்தையை அடுத்த வரிசை இப்ராஹிம் தெருவைச் சோ்ந்தவா்கள் முருகபாண்டி- விமலா தம்பதியினா். இவா்களுடைய மூத்த மகள் நாகநந்தினி (16). இவா் கமுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா் தனது சகோதரி நாகமீரா (15), 11 வயது சகோதரனுடன் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகில் உள்ள சுந்தராபுரம் ஊருணியில் குளிக்கச் சென்றாா். அப்போது, ஆழமானப் பகுதிக்கு சென்ற அக்காள், தங்கை இருவரும் மூச்சுத் திணறி தவித்ததைப் பாா்த்த ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி நாகமீராவை தனது சேலையை தண்ணீரில் போட்டு இழுத்து காப்பாற்றினாா். ஆனால், நாகநந்தினியைக் காப்பாற்ற அவா் எவ்வளவோ முயற்சித்த போதும் முடியாததால், தண்ணீரில் மூழ்கி மாணவி உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த கமுதி போலீஸாா் நாகநந்தினியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.