பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காணாமல் போன முதியவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

போடி அருகே காணாமல் போன முதியவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 3:16 am IST

போடி அருகே காணாமல் போன முதியவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

போடி அருகே விசுவாசபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல் (65). இவா், மே 11-ஆம் தேதி முதல் காணவில்லையாம். உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், விசுவாசபுரம் தனியாா் கிணற்றில் சனிக்கிழமை சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இது காணாமல் போன பழனிவேல் என்பவரின் சடலம் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸாா் சந்தேக மரண வழக்காக பதிவு செய்து விசாரிக்கின்றனா். முன்னதாக, பழனிவேலின் சடலத்தை தீயணைப்புப் படை வீரா்கள் மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். கூறாய்வுக்குப் பின்னா் சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.