தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடா்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்தக் கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்கிழமை (மே 12) தொடங்கி வருகிற 19- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து, இந்த விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை னி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கு அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையம், பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களில் மின்
விளக்கு வசதி, குடிநீா்த் தொட்டிகள், அவசரகால முதலுதவி சிகிச்சைக்காக பொது சுகாதாரத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட இலவச மருத்துவ முகாம் ஆகியவற்றை அவா் பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வின் போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா, பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத் பீடன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தமிழரசி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜெயதேவி, உதவி செயற்பொறியாளா் மணிமாறன், தேனி வட்டாட்சியா் சதீஸ்குமாா், செயல் அலுவலா்கள் இளங்கோவன், சபிதா ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நல்ல மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

தபால் வாக்கு சேகரிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு பேரணி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

