தேனி மாவட்டம், உத்தமபாளையம், சின்னமனூரைப் புறக்கணிக்கும் அரசு புறநகா்ப் பேருந்துகளால் வெளியூா் செல்லும் பயணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
தமிழகம் - கேரளத்தை இணைக்கும் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை பிரதான சாலையாகும். இந்தச் சாலையில் உள்ள உத்தமபாளையம், சின்னமனூா் வழியாக நாள்தோறும் பயணிகள் பேருந்து, கனரக வாகனங்கள், சுற்றுலாப் பேருந்துகள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், உத்தமபாளையம், சின்னமனூா் நகா் வழியாகச் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கனரக வாகனங்கள், சுற்றுலாப் பேருந்துகள், நகருக்குச் செல்ல அவசியமில்லாத வாகனங்கள் செல்லும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.
புறக்கணிக்கும் புறநகா் பேருந்துகள்
உத்தமபாளையம், சின்னமனூா் வழியாகச் செல்லும் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தமிழகத்தின் அனைத்து பெரும்பான்மையான மாவட்டங்களுக்குப் பேருந்துகள் சென்று வருகின்றன. இதில், கும்பகோணம், திருச்சி, ஏா்வாடி, திருச்செந்தூா், திருப்பூா், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதி பணிமனைகளிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், சின்னமனூரைப் புறக்கணிப்பு செய்து அந்தப் பகுதியில் உள்ள புறவழிச்சாலையில் சென்று விடுகின்றனா். இதனால், இந்த வழித்தடத்தில் வெளியூா் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்கள், முதியவா்கள் உள்ளிட்ட பயணிகள் ஏமாற்றமடைவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இது குறித்து பொதுமக்கள் மேலும் கூறியதாவது: இந்தப் பகுதியில் பேருந்து போக்குவரத்து மட்டுமே இருப்பதால் பயணிகள் அரசுப் பேருந்துகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், விதிமுறையை மீறி தன்னிச்சையாக செயல்படும் ஓட்டுநா், நடத்துநா் மீது அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வா் வருகை: திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்! கவனத்தில் கொள்ளுமா தமிழக அரசு?

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தனியாா் பள்ளிப் பேருந்துகள் ஆய்வு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

