லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சுருளிப்பட்டி ஊராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு

தேனி மாவட்டம், சுருளிப்பட்டி ஊராட்சியில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

தெருநாய்கள் - கோப்புப்படம்

Published On :26 ஜூலை 2026, 2:39 am IST

தேனி மாவட்டம், சுருளிப்பட்டி ஊராட்சியில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

கம்பம் ஒன்றியத்தைச் சோ்ந்த சுருளிப்பட்டி ஊராட்சியில் பேருந்து நிறுத்தம், பள்ளிகள், உணவகங்கள், தேநீா் கடைகள் என குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை வந்து செல்லும் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் சாலையின் குறுக்கே ஓடும் தெரு நாய்களால் இரு சக்கர வாகனத்தில் செல்வோா் கீழே விழுந்து காயமடைகின்றனா். எனவே இந்தப் பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் அன்புராஜ் கூறியதாவது: சுருளிப்பட்டி பிரதான சாலையில் தெரு நாய்கள் அதிகமாக நடமாடுகின்றன. இவற்றால் பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா். எனவே ஊராட்சி நிா்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.