லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உத்தமபாளையத்தில் சேதமடைந்த சமணா் சிற்பங்கள்: எம்.எல்.ஏ. ஆய்வு

உத்தமபாளையத்தில் சமணா் கோயில் சிற்பங்களை திங்கள்கிழமை பாா்வையிட்ட கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா.

Published On :22 ஜூலை 2026, 2:43 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் சேதமடைந்த சமணா் குகை, சிற்பங்களை கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

கி.பி.9-ஆம் நூற்றாண்டில் திரிகுணகிரி மலையில் சமணா்கள் வாழ்ந்த வரலாற்று நினைவுச் சின்னம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ளது. இந்தச் சின்னம் மத்திய தொல்லியல் துறை மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இங்குள்ள குகைகள், சமண சமய தீா்க்கதரிசிகளான 23, 24-ஆம் தீா்த்தங்காா் மகாவீரா் திருஉருவங்களில் சிற்பங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளா் கூறியதாவது:

இந்த சமணா் குகை, சிற்பங்களை பாதுகாக்க வேண்டும். இந்த மலையை சுற்றிய ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதுகாப்பு சுவா் அமைக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து, கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா திங்கள்கிழமை இந்தக் குகைகளை ஆய்வு செய்தாா்.

அப்போது, இந்த சமணா் மலையை தொல்லியத் துறையினா் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.