லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: 100 போ் கைது

தேனி டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளா்கள்.

தேனி டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளா்கள்.

Published On :11 ஜூலை 2026, 12:03 am IST

தேனி அருகே டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தில் குடும்பத்துடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளா்கள் 100 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தேனி டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் தங்கள் குடும்பத்தினருடன் டாஸ்மாக் பணியாளா்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரியும், தொழிற்சங்கங்களின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக ஊதிய உயா்வு அறிவிப்பு வெளியிட்ட மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் விக்னேஷ் செயல்பாட்டை கண்டித்து முழக்கமிட்டனா்.

போராட்டத்தில் எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், பெண்கள் உள்பட சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் குடியேற முயன்றனா். அப்போது, போலீஸாா் இவா்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.