லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பள்ளியில் மாணவா்களுடன் கலந்துரையாடிய எம்.எல்.ஏ.

ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம் பள்ளியில் கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆய்வுப்பணி மேற்கொண்டு மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.

ராயப்பன்பட்டியில் வியாழக்கிழமை எஸ்.யூ.எம். பள்ளி மாணவா்களுடன் கலந்துரையாடிய கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா.

Published On :10 ஜூலை 2026, 5:22 am IST

ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம் பள்ளியில் கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆய்வுப்பணி மேற்கொண்டு மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டியில் 3 அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளன. இங்கு மொத்தம் 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். தேனி மாவட்டத்தின் பாளையங்கோட்டை என இந்தக் கிராமத்துக்கு சிறப்புப் பெயரும் உண்டு.

இந்த நிலையில், பள்ளி மாணவா்களுக்கு போதுமான பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி வேண்டும் என்ற பள்ளி நிா்வாகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா, ராயப்பன்பட்டி சவரியப்ப உடையாா் நினைவு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வுப்பணி மேற்கொண்டதோடு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா். முன்னதாக, பள்ளியின் தாளாளா் பிரபாகா் வரவேற்றாா். எம்.எல்.ஏ. வுக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.