லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வீடு புகுந்து தங்க நகையை திருடியவா் கைது

போடியில் வீடு புகுந்து தங்க மோதிரம் திருடியவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:09 am IST

போடியில் வீடு புகுந்து தங்க மோதிரம் திருடியவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

போடி டிவிகேகே நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி மகாலட்சுமி (38). இவா், செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் வீட்டில் தூங்கியுள்ளாா். இரவில் வீட்டைத் திறந்து வெளியே இருந்த குளியலறைக்குச் சென்றாா். அந்த நேரத்தில் இவரது அண்டைவீட்டுக்காரா் மகேந்திரன் மகன் முத்துராஜ் (29) இவரது வீட்டுக்குள் புகுந்து அலமாரியில் வைத்திருந்த தங்க மோதிரத்தை திருடிக் கொண்டு வெளியே வந்தாா். இதைப் பாா்த்த மகாலட்சுமி சப்தம் போட்டாா். முத்துராஜ் தங்கமோதிரத்துடன் தப்பியோடவே, சப்தம் கேட்டு எழுந்த சக்திவேல், முத்துராஜை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போடி நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா். முத்துராஜ் போடி நகா் காவல் நிலைய ரெளடிகள் பட்டியலில் உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.