தேனி மாவட்டம், உத்தமபாளையம், போடி பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.
உத்தமபாளையம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிகுள்ளாகி வந்தனா். இந்த நிலையில், கம்பம், கூடலூா், உத்தமபாளையம், தேவாரம், சின்னமனூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை இடி, மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த திடீா் மழையால் வெப்பம் தனித்து குளிா்ச்சியான கால நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் உத்தமபாளையம் செல்லும் சாலையில் சாலைப் பணியின் போது தோண்டப்பட்ட கழிவுநீா் கால்வாய் பள்ளத்தால் மழைநீா் செல்ல வழியின்றி தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பேரூராட்சியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா், சாலைப் பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
போடி: போடி பகுதியில் கடந்த சில நாள்களாகவே கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகல் வரை போடி பகுதியில் வெப்பம் நிலவிய நிலையில், 2 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. சுமாப் ஒரு மணி நேரம் வரை மிதமான மழை பெய்தது. இந்த மழையால் இந்தப் பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான கால நிலை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி, குமரியில் கோடை மழை
ஊத்தங்கரையில் திடீா் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

போடியில் சூறைக்காற்றால் வாழைகள் சேதம்

கமுதியில் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

