போக்சோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொலை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

jail

சிறை - பிரதிப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 3:41 am IST

சிறுமிக்கு பாலியல் தொலை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடி, காமராஜா் காலனியைச் சோ்ந்த முதியவா் செல்வம் (66) என்பவா் அதே பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமியை கடந்த 28.7.2026 -அன்று பாலியல் வன்கொடுமை செய்ததான புகாரின்பேரில் குன்றக்குடி காவல் ஆய்வாளா் சுந்தரி வழக்குப்பதிவு செய்து கைது செய்தாா்.

இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் தனலட்சுமி முன்னிலையானாா். வழக்கை விசாரித்த நீதிபதி ரோகிணி, குற்றவாளி செல்வத்துக்கு, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 137(ஆ)-ன் கீழ் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், போக்சோ சட்டப்பிரிவு 9(ம்) உடன் இணைந்த பிரிவு 10-ன் கீழ் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், இரு சிறைத் தண்டனைகளையும் ஏககாலத்தில் அனுபவிக்கவும், பாதிக்கப்பட்டவருக்கு அரசின் சாா்பில் ரூ.1,00,000 இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.