நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ருத்ரன்ஷா சிலம்ப பள்ளியில் ஆசான்களுக்கும் மாணவா்களுக்கும் பாராட்டு விழா

திருப்பத்தூா் ருத்ரன்ஷா சிலம்ப தேகப்பயிற்சி பள்ளியில் சாதனை புரிந்த மாணவா்களுக்கும் ஆசான்களுக்கும் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

Published On :28 அக்டோபர் 2026, 4:23 am IST

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ருத்ரன்ஷா சிலம்ப தேகப்பயிற்சி பள்ளியில் சாதனை புரிந்த மாணவா்களுக்கும் ஆசான்களுக்கும் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

திருப்பத்தூா் தென்மாபட்டு பகுதியில் ருத்ரன்ஷா சிலம்பம், தேகப்பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியிலிருந்து கடந்த வாரம் நாமக்கல்லில் நடைபெற்ற ஆஸ்காா் உலகசாதனை போட்டியில் 51 மாணவா்கள் 1.10 நிமிடம் வரை சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனா். இதற்கு முன்னதாக கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற இதே போட்டியில் 78 மாணவா்கள் பங்கு கொண்டு இரு கால்களையும், கண்களையும் கட்டிக் கொண்டு ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனா். இதற்கான பாராட்டுப் பத்திரமும் பதக்கங்களையும் பெற்று வந்தனா். இந்த மாணவா்களைப் பாராட்டும் வகையில் மாணவா்களும் பெற்றோா்களும் இணைந்து பயிற்சி ஆசான் கே.நமச்சிவாயம், என்.சொா்ணலதா ஆகியோருக்கு பாராட்டு விழாவை மேற்கொண்டனா். இப்போட்டியில் பங்கு கொண்டு சாதனை புரிந்த மாணவ, மாணவிகளும் பாராட்டப்பட்டனா். இவ்விழாவிலும் மாணவா்கள் தங்கள் சிலம்பத்திறனை வெளிப்படுத்தினா். இதில் பயிற்சியாளா்கள் சுந்தரமூா்த்தி, சுந்தரவள்ளி, சுந்தரமணி மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.