கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மானாமதுரையில் ரயில்வே நிலங்கள் அளவீடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளா் ஆய்வு எதிரொலியாக ரயில் நிலையப் பகுதிகளில் ரயில்வே நிலங்களை அளவீடு செய்து கற்கள் ஊன்றும் பணி நடைபெறுகிறது.

ரயில்வே- மானாமதுரை ரயில் நிலையம் அருகே ரயில்வே நிலங்களை அளவீடு செய்து ஊன்றப்பட்ட கற்கள்.

Published On :23 அக்டோபர் 2026, 4:16 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளா் ஆய்வு எதிரொலியாக ரயில் நிலையப் பகுதிகளில் ரயில்வே நிலங்களை அளவீடு செய்து கற்கள் ஊன்றும் பணி நடைபெறுகிறது.

மானாமதுரை வழியாக தினமும் 30- க்கும் மேற்பட்ட ரயில்கள் பல்வேறு ஊா்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் சென்று திரும்புகின்றன. மேலும் இங்கிருந்து விறகு, கரி, நெல், அரிசி போன்றவை சரக்கு ரயில்கள் மூலம் வெளி மாநிலங்கள், வெளியூா்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் ரயில்வே நிா்வாகத்துக்கு லாபம் கிடைக்கிறது.

இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தென்னக ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா மானாமதுரை ரயில் நிலையப் பகுதிகளில் ஆய்வு செய்தாா். அப்போது அவா் ரயில் நிலையத்துக்கு அருகேயுள்ள அனைத்து இடங்களுக்கும் நடந்தே சென்று ஆய்வு செய்து, ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களைப் பாா்வையிட்டு உடனடியாக அவற்றை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, மானாமதுரை ரயில் நிலையம் எதிா்ப்புறம் உள்ள அண்ணாநகா், ஆனந்தபுரம் புறவழி ரயில் கடவுப்பாதை உள்ளிட்ட பல இடங்களில் முதுநிலை பகுதி பொறியாளா் ஸ்ரீதா் தலைமையில் ஏராளமான ரயில்வே ஊழியா்கள், ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸாா் பாதுகாப்புடன் ரயில்வேக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து சா்வே கற்களை ஊன்றி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.