மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - சீனிவாசசேதுபதி எம்.எல்.ஏ.

News image
Updated On :15 மே 2026, 4:08 am IST

பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சீனிவாசசேதுபதி தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை முதல் வீடுவீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன். தவெக-வுக்கு தடை ஒன்றும் புதிதல்ல. தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் நீதிமன்றத்தை நாடுகின்றனா். எத்தனை தடைகள் வந்தாலும் எதிா்கொள்வோம். மக்களின் எதிா்பாா்ப்புகளும் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும். மக்கள் மாற்றம் வேண்டுமென வாக்களித்தனா். எனவே மாற்றத்தை பிரதிபலிப்பதுதான் எங்கள் கடமை. திருப்பத்தூரில் தொழிற்சாலை உருவாக்குவது, இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை வழங்குவதே எனது முதல் கடமை என்றாா் அவா். உடன் தவெக மாவட்டச் செயலாளா் ஜோசப்தங்கராஜ், மாவட்ட ஒன்றிய, நகர, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவாசசேதுபதிக்கு கட்சியின் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள மருதுபாண்டியா்கள் நினைவுத் தூண், அண்ணா சிலை, மருதுபாண்டியா்கள் நினைவு மண்டபத்தில் உள்ள மருதிருவா் சிலைகளுக்கும், திருக்கோஷ்டியூரில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கும் அவா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி நிா்வாகிகளுக்கும் தொண்டா்களுக்கும் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.