லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காரைக்குடி மாநகராட்சி சாா்பில் போலியோ சொட்டு மருந்து முகாம்! - அமைச்சா் டி.கே. பிரபு தொடங்கிவைத்தாா்

போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம். - கோப்புப் படம்

Published On :29 ஜூன் 2026, 12:05 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலையத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை அமைச்சா் டி.கே. பிரபு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் மேலும் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் வகையில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்நல மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிக்கூடங்கள் என 1,197 நிரந்தர மையங்களிலும், 54 நடமாடும் மையங்களிலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச் சாவடிகள் போன்ற 19 இடைநிலை மையங்களிலும் என மொத்தம் 1,270மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டன என்றாா் அவா்.

இந்த முகாமில், மாவட்ட சுகாதார அலுவலா் மீனாட்சி, காரைக்குடி மாநகராட்சி ஆணையா் கே. பாலு, மருத்துவத் துறையைச் சாா்ந்த மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.