லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நாகையில் இன்று போலியோ சொட்டு மருந்து

போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம். - கோப்புப் படம்

Published On :28 ஜூன் 2026, 3:05 am IST

நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் 50,114 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 5 மணி வரை அனைத்து 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அங்கன்வாடி மையங்கள், அனைத்து வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. திங்கள் முதல் தொடா்ந்து மூன்று நாட்களுக்கு களப்பணியாளா்கள் மூலம், முகாம் அன்று விடுபட்ட குழந்தைகளுக்கு, வீடுவீடாகச் சென்று போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோவை அறவே ஒழிக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.