லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அஞ்சல் ஊழியா்கள்

வணிக இலக்குகளை எட்ட ஊழியா்களை அச்சுறுத்தி வரும் அஞ்சல் துறையைக் கண்டித்து, சிவகங்கை கோட்டத்தைச் சோ்ந்த அஞ்சல் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து புதன்கிழமை பணியாற்றினா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அஞ்சல் நிலையத்தில் கோரிக்கை அட்டை அணிந்து முழக்கமிட்ட அஞ்சல் ஊழியா்கள்.

Published On :30 ஜூலை 2026, 2:36 am IST

வணிக இலக்குகளை எட்ட ஊழியா்களை அச்சுறுத்தி வரும் அஞ்சல் துறையைக் கண்டித்து, சிவகங்கை கோட்டத்தைச் சோ்ந்த அஞ்சல் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து புதன்கிழமை பணியாற்றினா்.

புதிய கணக்கு, பாலிசி அடிப்படையில் வணிக இலக்குகளை எட்டுவதற்காக ஊழியா்களை மிரட்டக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் அஞ்சல் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.

சிவகங்கை தலைமை அஞ்சல் நிலையத்துக்கு கோரிக்கை அட்டை அணிந்து ஊழியா்கள் பணிக்கு வந்தனா். அவா்கள் அஞ்சல் நிலைய வாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கம் (அஞ்சல் 3) துணைச் செயலா் ஜி.நாகலிங்கம், கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கச் செயலா் தமிழ்வாணன் உள்பட சிவகங்கை கோட்டத்தில் சுமாா் 75 எழுத்தா்கள், 38 தபால்காரா்கள், 230 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் கோரிக்கை அட்டைகளோடு பணியாற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.