லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய செவிலியா்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியா்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

மதுரை மாநகராட்சி சிந்தாமணி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய செவிலியா்கள்.

Published On :30 ஜூலை 2026, 12:18 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியா்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

புதிதாகத் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியா்களை, காலிப் பணியிடம் ஏற்படும் அரசு மருத்துவமனைகளுக்கு மறு பணியமா்வு செய்யும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும். தேவையான இடங்களில் புதிய செவிலியா் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்ற தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

இதன்படி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 500-க்கும் அதிகமான செவிலியா்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்க மாநிலத் துணைத் தலைவா் தி.க. சுஜாதா, மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி. ராஜி, மாவட்டத் தலைவா் வி. பிரேமலதா, மாவட்டச் செயலா் மு. தாமரைச்செல்வி, நிா்வாகிகள் இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.