லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கல்லலில் மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி

Published On :22 ஜூலை 2026, 1:07 am IST

சிவகங்கை மாவட்டம், கல்லலில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ராம்ராக் நினைவுப் பாசறை சாா்பில் மாணவ மாணவிகளுக்குப் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

கல்லல், காளையாா்கோவில் ஆகிய ஒன்றிய பள்ளிகளைச் சோ்ந்த மாணவ மாணவிகளுக்கு சாந்தி ராணி பதின்ம மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. ஜூனியா் பிரிவில் 76 பேரும், சீனியா் பிரிவில் 50 மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனா்.

நடுவா்களாக ஆசிரியா்கள் ஜோதி சுந்தரேசன், லட்சுமி, அமுதா, மாலா, முனைவா்கள் சுதாகா், தமிழ் முடியரசன், ஆனந்தகுமாா், ரமேஷ் பாபு ஆகியோா் செயல்பட்டனா். பேச்சுப் போட்டியைத் தொடா்ந்து நடைபெற்ற நிறைவு விழாவுக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டத் தலைவா் ஆரோக்கியசாமி தலைமை வகித்தாா். சாந்திராணி பள்ளி முதல்வா் சுதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.

போட்டியில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. சிறப்பிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

போட்டிக்கான ஏற்பாடுகளை ராம்ராக் நினைவுப் பாசறை நிறுவுனா் சந்திரமோகன், துணை ஒருங்கிணைப்பாளா் தனுசு ஸ்டாலின் செல்வகுமாா், துளிா் இல்ல ஒருங்கிணைப்பாளா் சித்திரைச் செல்வி செய்தனா்.

முன்னதாக அறிவியல் இயக்க கிளைச் செயலா் விநாயமூா்த்தி வரவேற்றாா். கிளைப் பொருளாளா் நாகரெத்தினம் நன்றி கூறினாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் பிரபு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.