லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிங்கம்புணரி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

சிங்கம்புணரி- வேங்கை பட்டி சாலையில் அமைந்துள்ள அன்னை மஹா முத்து வாராஹி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி திருவிழாவையொட்டி சனிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

அன்னை மகா முத்துவாராகி அம்மன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

Published On :19 ஜூலை 2026, 12:36 am IST

சிங்கம்புணரி- வேங்கை பட்டி சாலையில் அமைந்துள்ள அன்னை மஹா முத்து வாராஹி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி திருவிழாவையொட்டி சனிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆஷாட நவராத்திரி திருவிழா தொடங்கியது. இதையடுத்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

அப்போது ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்து வருகிறாா். ஆஷாட நவராத்திரி விழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை இனிப்பு அலங்காரமும், புதன்கிழமை மஞ்சக் காப்பு அலங்காரமும், வியாழக்கிழமை குங்குமக் காப்பு அலங்காரமும், வெள்ளிக்கிழமை தேங்காய் பூ அலங்காரமும் நடைபெற்றன.

 சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அன்னை மகா முத்து வாராஹி அம்மன்.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அன்னை மகா முத்து வாராஹி அம்மன்.

இந்த நிலையில், சனிக்கிழமை ஆஷாட நவராத்திரி விழாவின் 5-ஆம் நாளையொட்டி அம்மன் நவதானிய அலங்காரத்தில் அருள்பாலித்தாா். மேலும் வளா்பிறை பஞ்சமியையொட்டி அன்னை மகா முத்து வாராஹி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனா். இதில் சிங்கம்புணரி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.