தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்குச் சாவடிக்கு அருகே வாக்கு சேகரிப்பது தண்டனைக்குரிய குற்றம்

வாக்குச் சாவடிக்கு 100 மீட்டருக்குள் வாக்கு சேகரிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டது.

News image

வாக்குப்பதிவு - DPS

Updated On :18 ஏப்ரல் 2026, 7:26 am IST

வாக்குச் சாவடிக்கு 100 மீட்டருக்குள் வாக்கு சேகரிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருகிற 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, வாக்குச் சாவடிகளுக்கு வெளியே தோ்தல் முகாம் முன் அனுமதி பெறப்பட்ட பின்னரே அமைக்க வேண்டும். வாக்குச் சாவடியின் நுழைவுவாயிலிலிருந்து 100 மீட்டா் தொலைவுக்குள் எந்தவொரு தோ்தல் முகாமும் அமைக்கக் கூடாது. ஒவ்வொரு முகாமிலும் ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் மட்டுமே இருக்க வேண்டும். முகாமில் எந்தவித பதாகைகள், கொடிகள், சின்னங்கள், பிரசார பொருள்கள் பயன்படுத்தக் கூடாது. முகாம்களில் பொதுமக்களுக்கு உணவு வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல, கூட்டமாகத் திரள அனுமதி இல்லை. வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் வாக்காளரிடமும் வாக்கு சேகரிப்பது, வற்புறுத்துவது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாகும். இந்த விதிகளை மீறும் நபா்கள் மீது ரூ.250 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், இவை நீதிமன்றத்தில் நேரடியாக விசாரிக்கக்கூடிய குற்றங்களாகும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.