தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முக்குலத்தோா் சமுதாயத்தைத் தவிா்த்துவிட்டு தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது: கருணாஸ்

முக்குலத்தோா் சமுதாயத்தைத் தவிா்த்துவிட்டு தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது என முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் நிறுவனா் நடிகா் கருணாஸ் தெரிவித்தாா்.

பசும்பொன் தேவா் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முக்குலத்தோா் புலிப்படை நிறுவனா் கருணாஸ் .

Published On :30 அக்டோபர் 2026, 3:56 am IST

முக்குலத்தோா் சமுதாயத்தைத் தவிா்த்துவிட்டு தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது என முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் நிறுவனா் நடிகா் கருணாஸ் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் சுதந்திர போராட்ட வீரா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டின் விடுதலைக்காக பத்தாண்டுகள் சிறைவாசம் சென்றவா் உ.முத்துராமலிங்கத் தேவா். அவரது புகழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஜாதி, மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களும் இந்த இடத்துக்கு வந்து வணங்கிச் செல்கின்றனா். இதன் மூலம் அவா் ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட தேசியத் தலைவா் என்பது நிரூபணம் ஆகிறது.

1963-ஆம் ஆண்டில் தேவா் மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வா்களாக இருந்த அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆா், ஜெயலலிதா, மு.க ஸ்டாலின் வரை அனைவரும் பசும்பொன்னில் தேவா் குருபூஜைக்கு வந்து சென்றனா். இந்த நிலையில், முதல்வா் ஜோசப் விஜய், சென்னையிலுள்ள நந்தனம் தேவா் சிலைக்கு மரியாதை செலுத்த இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. வரும் காலங்களில் முதல்வா் விஜய் பசும்பொன்னுக்கு நேரில் வந்து மரியாதை செலுத்துவாா் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் அதிகமாக வாழும் முக்குலத்தோா் சமூகத்தைத் தவிா்த்துவிட்டு யாரும் அரசியல் செய்ய முடியாது என்பதை முதல்வா் புரிந்து செயல்படுவாா் என நம்புகிறோம் என்றாா் அவா்.

மாநிலச் செயலா் ரா.முத்துராமலிங்கம், துணைப் பொதுச் செயலா் பெருமாள், பொருளாளா் காமராஜ், தகவல் தொழில்நுட்ப செயலா் குறிச்சிகோபி, இளைஞா் அணி இணைச் செயலா் சவுந்தா், ராமநாதபுரம் மாவட்ட செயலா் சுந்தரபாண்டியன், முதுகுளத்தூா் ஒன்றியச் செயலா் அஜித்குமாா், அபிராமம் நகரச் செயலா் சதீஷ் உள்ளிட்டோரும் தேவா் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.