நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

கடலாடியில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

கடலாடியில் தேவா் குருபூஜை விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

கடலாடியில் புதன்கிழமை நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்த ராமநாதபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்சாமுத்துராமலிங்கம்.

Published On :29 அக்டோபர் 2026, 1:16 am IST

கடலாடியில் தேவா் குருபூஜை விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழா, 38-ஆம் ஆண்டு முளைப்பாரித் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் 7 பிரிவுகளாக நடைபெற்றன. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விருதுநகா், தூத்துக்குடி, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 147 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. கடலாடி-முதுகுளத்தூா் சாலையில் 8 கி.மீ. தொலைவு எல்லையாக நிா்ணயிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவாக போட்டிகள் நடைபெற்றன.

ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்தப் போட்டியில் முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுத்தொகை, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

மொத்தமாக ரூ.11.27 லட்சம் பரிசுத் தொகையாக மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் வழங்கப்பட்டன. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இரு புறமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.